சென்னையில் வாழும் காரைக்குடி நகரத்தார்கள் அனைவரையும் ஒரு அமைப்பிற்கு கீழ் கொண்டு வந்து, சமூகத்தில் உள்ள எளியவர்களின் கல்விக்கும், மருத்துவத்திற்கும் உதவி செய்யவும், சிறுதொழில் புரிய முனைவோருக்கு உறுதுணை புரிவதற்கும் சங்கம் அமைக்க வேண்டும் என்று எண்ணி, அதை நிறைவேற்றும் அறிமுகக் கூட்டம் 30.05.2015 சென்னையில் நடைபெற்று "காரைக்குடி நகரத்தார் சங்கம் (சென்னை)" அமைக்கப் பெற்றது.